Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!

#DumindaDissanayake #CourtOrder #Suspect #LegalCase #CourtNews #SriLankaNews #BreakingNews #Justice #LawAndOrder #Judiciary #Investigation #CrimeNews #LegalUpdate #CourtDecision #NewsAlert

ஆனி 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் கண்டெடுக்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் தொடர்பான வழக்கில், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடுமாறு கல்கிசை நீதவான் காஞ்சனா என். சில்வா இன்று (19) உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், அவருக்கு எதிராகப் போதிய சாட்சியங்கள் காணப்படுவதால், சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு இணங்க, அடுத்த வழக்குத் தவணையில் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு துமிந்த திஸாநாயக்கவிற்கு அழைப்பாணை அனுப்புமாறும் நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இன்று (19) கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் இவ்வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குடன் தொடர்புடைய நேரடி மற்றும் சூழ்நிலைச் சாட்சியங்கள் போதியளவு இல்லாமையினால், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவை வழக்கிலிருந்து விடுவிப்பதாகக் கடந்த ஆண்டு ஜூலை 29 ஆம் திகதி அன்றைய கல்கிசை நீதவான் சதுரிகா டி சில்வா உத்தரவிட்டிருந்தார்.

ஹெவ்லொக் சிட்டி சொகுசு அடுக்குமாடி குடியிருப்பில் மீட்கப்பட்ட தங்க முலாம் பூசிய ரி-56 ரக துப்பாக்கியின் உரிமையாளர் யார் என்பது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், கடந்த ஆண்டு மே மாதம் 23 ஆம் திகதி முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க கைது செய்யப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து, அவர் கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர், அவரது தரப்பால் சமர்ப்பிக்கப்பட்ட பிணை விண்ணப்பத்தைப் பரிசீலித்த நீதிமன்றம், கடுமையான பிணை நிபந்தனைகளின் கீழ் அவர் விடுவிக்கப்பட்டார்.

எனினும், தற்பொழுது புதிய சாட்சியங்களின் அடிப்படையில் அவர் மீண்டும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

50 ஆண்டுகளாக தனியார் பஸ்களையே மக்கள் பயன்படுத்தி வருகின்றனர் – கெமுனு விஜயரத்ன

ஆவணி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

குருந்தூர் விகாரை பாதுகாப்பு பொலிஸ் உத்தியோகத்தர்களை மீள பணியில் அமர்த்துமாறு கடிதம்

ஆவணி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

முல்லைத்தீவில் வெடிபொருள் பயன்படுத்தி பிடிக்கப்பட்ட மீன்கள் மீட்பு

புரட்டாதி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மூத்த பாடகி நந்தா மாலனியின் பூதவுடலுக்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அஞ்சலி

ஆவணி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube