Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

சைபர் குற்றவாளிகளால் கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணை – பிரதமர் ஹரினி அமரசூரிய!

சித்திரை 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சைபர் குற்றவாளிகளால் நிதி அமைச்சிலிருந்து கைப்பற்றப்பட்ட 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் தொடர்பில் முறையான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று வெள்ளிக்கிழமை (24) காலை கண்டியில் நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பிரதமர், இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகள் நடைபெற்று வருவதாகவும், இதில் தொடர்புடையவர்களுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.

இந்த மோசடி தொடர்பான விசாரணைகளுக்கு சர்வதேச ரீதியான ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைத்துள்ளதாக அவர் தெரிவித்தார். ஒரு அரசாங்கம் என்ற ரீதியில் இச்சம்பவம் தொடர்பாக எடுக்க வேண்டிய அனைத்து அவசியமான நடவடிக்கைகளையும் முன்னெடுப்பதாக அவர் உறுதியளித்தார்.

எதிர்க்கட்சியினரால் தனக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ளதாகக் கூறப்படும் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்தும் பிரதமர் இதன்போது கருத்து தெரிவித்தார்.

“எனக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டுவர முயற்சிக்கிறார்கள். அது பாராளுமன்றத்திற்கு வரும் வரை நான் காத்திருக்கிறேன்.

அதன் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க எனக்கு ஒரு சந்தர்ப்பம் கிடைக்கும். ஒரு ஜனநாயக நாட்டில் எதிர்க்கட்சி என்பது அத்தியாவசியமானது.

அரசாங்கத்தின் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதும் மாற்று அரசியல் கருத்துக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதும் முக்கியமானது. ஆனால் தற்போதைய எதிர்க்கட்சி அதைத்தான் செய்கிறதா என்பதை மக்களே சிந்திக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

விளையாட்டு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இன்று தோனி விளையாடுகிறாரா?

சித்திரை 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மத ரீதியிலான தாக்குதலில் இந்து, கிறிஸ்தவ மக்களே அதிகம் குறிவைக்கப்படுகின்றார்கள்!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

14 வயதுச் சிறுமியைப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய 18 வயது இளைஞன் கைது!

ஆனி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காத்தான்குடி நகரசபையில் சர்ச்சை-  ஜனாதிபதி மற்றும் உயர் அதிகாரிகளுக்கு எதிர்க்கட்சிகள் அவசர அழைப்பு!

ஆனி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube