Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜூன் 29 நாடு முழுவதும் மதுபானசாலைகளை மூட உத்தரவு!

ஆனி 24, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, ஜூன் மாதம் 29ஆம் திகதியன்று நாடு முழுவதும் சில்லறை விலையில் மதுபானம் விற்பனை செய்யும் அனைத்து மதுபானசாலைகள் மூடப்பட்டிருக்க வேண்டும் என்று சுங்கவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன அறிவித்துள்ளார்.

இதற்கமைய, 2026.06.28 ஆம் திகதி மதுபானசாலைகள் மூடப்படும் நேரம் முதல் 2026.06.30 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரம் வரை நாடு முழுவதிலும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும்.

அதேபோன்று, தேசிய பொசன் விழாவை முன்னிட்டு 2026.06.26 ஆம் திகதி முதல் 2026.07.02 ஆம் திகதி வரை அநுராதபுர புண்ணிய நகரத்தை கேந்திரமாகக் கொண்டு பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பொசன் வாரத்தில் மிஹிந்தலை, மத்திய நுவரகம்பலாத்த, கிழக்கு நுவரகம்பலாத்த மற்றும் மஹாவிலச்சிய ஆகிய 04 பிரதேச செயலகப் பிரிவுகளுக்குள் அமைந்துள்ள அனைத்து மதுபானசாலைகளையும் அந்த நாட்களில் மூடுமாறு சுங்கவரி ஆணையாளர் நாயகம் உத்தரவிட்டுள்ளார்.

குறித்த பிரதேச செயலகப் பிரிவுகளில் உள்ள அனைத்து மதுபான அனுமதிப்பத்திரம் பெற்ற இடங்களும் 2026.06.25 ஆம் திகதி மூடப்படும் நேரம் முதல் 2026.07.03 ஆம் திகதி மீண்டும் திறக்கப்பட வேண்டிய நேரம் வரை மூடப்பட்டிருக்க வேண்டும் என்றும் சுங்கவரி ஆணையாளர் நாயகம் எம்.பி.என்.ஏ. பேமரத்ன தெரிவித்துள்ளார்.

இதன்படி, குறிப்பிட்ட தினங்களில் தங்களது மதுபானசாலைகளை மூடத் தவறும் அல்லது அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் இடங்கள் ஏதேனும் இருப்பின், அது குறித்த தகவல்களை 1913 என்ற விசேட இலக்கத்தின் ஊடாக 24 மணித்தியாலங்களும் இயங்கும் சுங்கவரி திணைக்களத்தின் கட்டுப்பாட்டு அறைக்கு வழங்குமாறு பொதுமக்களிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன், அவ்வாறு அனுமதிப்பத்திர நிபந்தனைகளை மீறும் இடங்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு நாட்டின் அனைத்து சுங்கவரி நிலையப் பொறுப்பதிகாரிகளுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மதவாச்சி – தலைமன்னார் புகையிரத சேவையின் பரீட்சார்த்த நடவடிக்கை

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பெண்களுக்குச் சம்பளத்துடனான மாதவிடாய் விடுமுறை

வைகாசி 29, 2026
இலங்கை

சுரேஷ் சலேவின் பிணை கோரிக்கை ‘வேடிக்கையான நாடகம்’ – வசந்த முதலிகே

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சுரேஷ் சலே உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து உண்மையை சொல்வது நல்லது – நளிந்த ஜயதிஸ்ஸ!

ஆனி 17, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube