Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் – ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க

ஆனி 25, 2026
படிக்க 1 நிமிடங்கள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் சில மாதங்களுக்குள் இரத்து செய்யப்படும் என ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைக் கட்டுப்படுத்த ஒரு வலுவான சட்டம் இயற்றப்படும் எனவும்,
நீதிமன்றங்கள் செயலிழக்காத வகையில் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும் எனவும் உச்ச நீதிமன்றங்களில் உள்ள வெற்றிட இடங்களை குறுகிய காலத்தில் நிரப்ப முடியும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.

நமது நாடு ஒரு ஊழல் நிறைந்த அரசாக இருந்தது. எமது இராணுவம், புலனாய்வுப் பிரிவினர் மீதான கௌரவம், பாராட்டு மற்றும் விசுவாசம் எமக்கு உள்ளது. ஆனால், எமது இராணுவமும் புலனாய்வுப் பிரிவினரும் நாட்டின் பாதுகாப்புக்காகவும், மக்களின் பாதுகாப்புக்காகவும் அர்ப்பணிப்புடன் செயலாற்றும்போது, அவர்கள் எங்கேனும் அநீதிக்குள்ளானால் நாம் அவர்களுக்காக முன்னிற்போம்.

உள்நாட்டிலும் சர்வதேச ரீதியிலும் மக்களின் பாதுகாப்புக்காகவும், நாட்டின் பாதுகாப்புக்காகவும் இராணுவமும் புலனாய்வுப் பிரிவும் செயற்பட்டிருந்தால், அவர்களை எந்த இடத்திலும் பாதுகாக்கவும் கௌரவிக்கவும் நாம் கடமைப்பட்டுள்ளோம். அந்தப் பணியை நாம் செய்வோம்.”

“ஆனால், இராணுவத்திலோ அல்லது புலனாய்வுப் பிரிவிலோ உள்ள ஒரு சிறிய குழுவினர், ஏதேனும் ஒரு குடும்பத்தின் அதிகாரத்துக்காக அல்லது ஒரு அரசியல் முகாமின் அதிகாரத்துக்காக அரச தேவையின் பேரில் குற்றங்களைச் செய்திருந்தால், அவர்களுக்குரிய தண்டனையை வழங்க எமது அரசாங்கம் தயங்காது.”

குற்றவாளிகள் முறையாக நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள். காலப்போக்கில் இ ந்த குற்றச்செயல்கள் எல்லாம் மறைந்துபோகும் என சிலர் நினைத்தார்கள். அதற்கு நாங்கள் இடமளிக்க மாட்டோ என ஜனாதிபதி இன்று பாராளுமன்றத்தில் குறிப்பிட்டார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சட்டவிரோத மதுபானம் மற்றும் கோடாவுடன் இருவர் கைது!

ஆடி 2, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் வேலைவாய்ப்பை பெற்றுத்தருவதாக கூறி பணமோசடி!

வைகாசி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இயர்போன் பயன்படுத்தாமல் பாடல் கேட்டால் 2500 ரூபா அபராதம்!

ஆடி 14, 2026
இந்தியாஇலங்கை

மே மாதம் 4ஆம் திகதி தேர்தல் முடிவுகள்!

சித்திரை 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube