Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கையில் இளைஞர் வேலையின்மை விகிதம் கணிசமாக வீழ்ச்சி!

ஆனி 27, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சுற்றுலா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறைகள் மூலமாகவும், தனியார் துறையுடனான கூட்டுப் பங்களிப்பின் மூலமாகவும் அரசாங்கம் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கியுள்ளதால், இலங்கையில் இளைஞர் வேலையின்மை விகிதம் கடந்த ஒரு வருடத்தில் கணிசமாகக் குறைந்துள்ளதாக இளைஞர் விவகார பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹேன்னாயக்க தெரிவித்துள்ளார்.

திவுலப்பிட்டியவில் உள்ள தேசிய இளைஞர் படையணி பயிற்சி நடைபெற்ற ‘இளைஞர் உத்வேக விளையாட்டு விழா 2026’ இறுதிப்போட்டி மற்றும் பரிசளிப்பு விழாவில் முதன்மை அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் இளைஞர்களுக்கு சிறந்ததொரு எதிர்காலத்தை உருவாக்குவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மையான இலக்காகும் என அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இது தொடர்பாக பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டதாவது:

இளைஞர்கள் போதைப்பொருள் பழக்கங்களுக்கு அடிமையாவதைத் தடுத்து, அவர்களை நல்வழிப்படுத்துவதற்காக முறையான தலைமைத்துவப் பயிற்சித் திட்டங்களை அறிமுகப்படுத்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

அத்துடன், ஒழுக்கநெறி மற்றும் மனித விழுமியங்களை வளர்க்கும் நோக்கில் விளையாட்டு மற்றும் கலைத்துறை சார்ந்த நடவடிக்கைகள் நாடு தழுவிய ரீதியில் ஊக்குவிக்கப்படும்.

மேலும், இலங்கை இளைஞர்களின் திறமைகளை சர்வதேச மட்டத்துக்கு கொண்டு செல்வதற்காக அரசாங்கத்தினால் இரண்டு புதிய திட்டங்கள் விரைவில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன என்றார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைவிளையாட்டு

லஹிரு உதார 188 ஓட்டங்கள் குவித்து இரட்டைச் சதத்தை தவறவிட்டார்!

ஆடி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராண்ட்பாஸில் விபத்து – வாகன போக்குவரத்துக்கும் பாதிப்பு

ஆடி 8, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வெளிநாட்டவர்களை ஏமாற்றி பணம், நகை பறித்த கும்பல் சுன்னாகத்தில் கைது!

ஆனி 10, 2026
இலங்கைவானிலை

வெப்பநிலை அதிகரிப்பு

ஆடி 26, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube