Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தன்சல் வரிசையில் நின்ற இளைஞனை தாக்கிய குழுவினர் கைது!

ஆடி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மாலபே நகரில் பொசன் பெளணர்மி தினத்தன்று அமைக்கப்பட்டிருந்த தானசாலை ஒன்றில் வரிசையில் நின்றிருந்த இளைஞர் ஒருவரை, ஒரு குழுவினர் பாதுகாப்புத் தலைக்கவசம் மற்றும் கைகளாலும் கால்களாலும் கொடூரமாகத் தாக்கும் காணொளி சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இச்சம்பவம் தொடர்பாக நேற்று (30) செவ்வாய்க்கிழமை மாலபே பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அதற்கமைய, இத்தாக்குதலுடன் தொடர்புடைய பட்டிவத்த வீதி, கொத்தலாவல பகுதியைச் சேர்ந்த 16 மற்றும் 17 வயதுடைய ஐந்து சந்தேகநபர்களை மாலபே பொலிஸார் நேற்றைய தினம் கைது செய்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட இளைஞர் மாலபே நகரில் உள்ள தானசாலையில் சோறு வாங்குவதற்காக வரிசையில் நின்றிருந்தபோது, வரிசைக்கு வெளியில் இருந்து வந்த இருவர் அவருக்கு முன்னால் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர்.

இதன்போது, அவர்களை வரிசையின் பின்னால் சென்று நிற்குமாறு அந்த இளைஞர் கூறியதே இக்கொடூரத் தாக்குதலுக்குக் பிரதான காரணமாக அமைந்துள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேகநபர்களும் இன்றைய தினம் கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதுடன், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய சந்தேகநபர்களையும் கைது செய்வதற்காக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹட்டன் – கொழும்பு பாதை ஒருவழி பாதையாக திறப்பு

ஆவணி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

‘நீதிக்கான நீள்பயணம்’ சர்வதேச மாநாடு

ஆவணி 30, 2026
இலங்கை

சுப்பர்மார்க்கெட்டில் பொருட்கள் அபகரித்ததாக பெண் சட்டத்தரணி கைது!

ஆனி 20, 2026
இலங்கைதொழில்நுட்பம்முக்கியச் செய்திகள்

பேஸ்புகில் AIனால் உருவாக்கப்பட்ட போலி கணக்குகள் – மோசடி மற்றும் ஆபாச உரையாடல்களில் சிக்க வைக்கும் முயற்சி!

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube