அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே தனது உண்ணாவிரதப் போராட்டத்தைக் கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனது சட்டத்தரணிகளின் ஆலோசனைகள் மற்றும் கோரிக்கைகளை அடுத்தே அவர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக சுரேஷ் சலேவின் சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர்.
