நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரின் வீட்டில் பில்லியன் கணக்கான மதிப்புள்ள தங்கத்தால் செய்யப்பட்ட உள்ளாடைகள் மற்றும் கோடிக்கணக்கான பணக்கட்டுகளும் கண்டெடுக்கப்பட்ட செய்தி, தற்போது உலகம் முழுவதும் பேசுபொருளாக மாறியுள்ளது.
ஈராக் நாடாளுமன்ற உறுப்பினரான ஹிந்த் அல்-அப்பாசி (Hind Al-Abbasi) என்பவருக்கு சொந்தமான வீட்டில் இருந்தே இந்த ஆபரணங்கள் மற்றும் சொத்துக்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட பாரிய ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகளின்போது நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அந்நாட்டு பாதுகாப்புப் படையினர் அவரது வீட்டை முற்றுகையிட்டு நடாத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 57 மில்லியன் டொலர்கள் பணமும், 27 கி.கி எடையுள்ள தங்கமும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
