இலங்கையின் சென்னை துணை உயர்ஸ்தானிகர் டாக்டர் கணேசநாதன் கீதீஸ்வரன், தமிழ்நாடு முதல்வர் சி. ஜோசப் விஜயை மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
இந்தச் சந்திப்பின்போது, முதல்வராக பொறுப்பேற்றதற்காக அவருக்கு வாழ்த்து தெரிவித்ததுடன், புதிய அரசுக்கு தனது நல்வாழ்த்துகளையும் தெரிவித்தார்.
மேலும், இலங்கை மற்றும் தமிழ்நாட்டுக்கு இடையிலான ஒத்துழைப்பு மற்றும் மக்களுக்கிடையேயான உறவுகளை மேலும் வலுப்படுத்த இலங்கை உறுதிபூண்டுள்ளதாக துணை உயர்ஸ்தானிகர் மீண்டும் வலியுறுத்தினார்.
