இன்று (06) மேல், சபரகமுவ மாகாணங்களிலும், காலி, மாத்தறை, கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்களிலும், இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சிலாபம் முதல் கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.
தென்மேற்குத் திசையிலிருந்து மணிக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசும். காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். ஏனைய கடற்பரப்புகளில் மணிக்கு 50 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும்.
காங்கேசன்துறை முதல் மன்னார் ஊடாக புத்தளம் வரையும், மாத்தறை முதல் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையும் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். ஏனைய கடற்பரப்புகளும் ஓரளவு கொந்தளிப்பாக இருக்கும்.
மேலும், சிலாபம் முதல் கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0 முதல் 2.5 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
