வாத்துவ மொல்லிகொட பகுதியில் இடம்பெற்ற மோதலைத் தொடர்ந்து ஒருவர் உயிரிழந்ததாக சமூக ஊடகங்களில் பரவி வரும் தகவல்கள் உண்மையல்ல என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி மொல்லிகொட பகுதியில் உள்ள பலமாடி குடியிருப்பு வளாகமொன்றின் அருகில், வாடகை அடிப்படையில் தங்கியிருந்த இரண்டு குழுக்களுக்கிடையில் இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தின் போது தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் பிரதான சந்தேகநபர் அதே நாளில் வாத்துவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, 14ஆம் திகதி பாணந்துறை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார். இதன்போது அவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டதுடன், பின்னர் விவகாரம் சமரச நடவடிக்கைக்காக அனுப்பிவைக்கப்பட்டது.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் மேலும் மூன்று சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.
