பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்கள், கொழும்பு செட்டியார் தெருவில் அமைந்துள்ள கல்யாண முருகன் மண்டபத்தில் நேற்றைய தினம் (05.07.2026) நடைபெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மன்றத்தை அங்குரார்ப்பணம் செய்து வைத்தார்.
இந்நிகழ்வில் ‘சிகரம் அபிவிருத்தி நற்பணி மன்றத்தின்’ தலைவர், செயலாளர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மலையக மக்களின் கல்வி, சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்தியை முன்னெடுக்கும் நோக்கில் இந்த மன்றம் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
