Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீர்கொழும்பு சிறை சம்பவம்-பொறுப்பை ஏற்றார் நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார

ஆடி 6, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நீர்கொழும்பு சிறையில் இடம்பெற்ற உயிரிழப்புகளுக்கு வழிவகுத்த வன்முறை சம்பவம் தொடர்பாக ஆழ்ந்த அதிர்ச்சியும் கவலையும் தெரிவித்துள்ள நீதி அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார, சம்பந்தப்பட்ட அமைச்சின் பொறுப்பாளராக இதற்கான பொறுப்பை தாம் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்துள்ளார்.

இன்று (06) ஊடகங்களிடம் கருத்து தெரிவித்த அவர், தற்போது சிறைச்சாலையின் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளதாக கூறியதுடன், மனித உயிரிழப்புகளை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றார்.

“மனித உயிர்கள் பறிபோனது என்னை மிகவும் வேதனைக்குள்ளாக்கியுள்ளது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்றும் அவர் கூறினார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் முழுமையான விசாரணை நடத்தப்பட்டு, இனி இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் அமைச்சர் உறுதியளித்தார்.

மேலும், ஒருவர்மீது பழியை சுமத்துவதை விட, உண்மைகளை கண்டறிந்து இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழாமல் தடுப்பதே தமது முதன்மை நோக்கம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

தாதியர் சேவையில் 13,600 பேரை இணைக்க நடவடிக்கை!

வைகாசி 31, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அதிபர் சேவையின் III ஆம் தரத்திற்கான போட்டிப்பரீட்சை ஜூன் 7

ஆனி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

துமிந்த திஸாநாயக்கவை மீண்டும் சந்தேகநபராக பெயரிட நீதிமன்றம் உத்தரவு!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

13 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 15, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube