Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிராம மக்களால் மீள விகாரைக்கு அழைத்து வரப்பட்டார் இராஜாங்கனை சத்தாரதன தேரர்!

ஆடி 7, 2026
படிக்க 2 நிமிடங்கள்

தாக்குதல் சம்பவங்கள் மற்றும் கொலை அச்சுறுத்தல்கள் காரணமாக விகாரையை விட்டு வெளியேறி, தனது சகோதரரின் இல்லத்தில் தஞ்சமடைந்திருந்த இராஜாங்கனை சத்தாரதன தேரரை, கிராம மக்கள் பேருந்துகளில் திரண்டு சென்று மீண்டும் விகாரைக்கு அழைத்து வந்துள்ளனர்.

விகாரைப்பணி சபையினர் மற்றும் கிராம மக்களது தடையையும் மீறி, உயிருக்கு ஏற்பட்ட பயம் காரணமாகவே தான் தற்காலிகமாக வெளியேறியிருந்ததாக இராஜாங்கனை சத்தாரதன தேரர் நேற்று திங்கட்கிழமை (06) ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டார்.

தேரர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

‘விகாரையில் தனியாக இருந்து சமூக ஊடகப் பணிகளைச் செய்து வந்த என் மீது, பிரபல வர்த்தகர் மற்றும் வன்முறைக் கும்பலினர் திட்டமிட்டு இரண்டு முறை தாக்குதல் நடத்த முற்பட்டனர். அண்மையில் இரவு 10.30 மணியளவில் முகம் தெரியாத குழுவினர் என்னை விகாரைக்குள் புகுந்து கொலை செய்ய முயன்றனர். முதலாம் நாள் வந்த ஒருவர் கைது செய்யப்பட்டாலும், இதன் பின்னணியில் உள்ள முக்கிய சூத்திரதாரிகள் இன்னும் சுதந்திரமாகவே நடமாடுகின்றனர். எனவே, பொலிஸ்மா அதிபர் இவ்விடயத்தில் உடனடியாகத் தலையிட்டு அவர்களைக் கைது செய்ய வேண்டும்.

நாம் துறவிகள் என்ற ரீதியில் பழிவாங்க நினைப்பதில்லை. ஆனால், இன்று எனக்கு நடந்த கொடுமை நாளை மற்றுமொரு துறவிக்கும் நேரலாம். நான் விகாரைக்குச் சென்று பணம் சம்பாதிக்கத் துறவறம் பூணவில்லை. எனது தந்தை இரு கண்களும் தெரியாதவர், தாய் விவசாயம் செய்து எங்களை வளர்த்தாள். ஏழையாக இருந்தாலும் எவ்வித இலாப நோக்கமும் இன்றி எனது முழு வாழ்க்கையையும் சாசனத்துக்காகவும் நாட்டு மக்களுக்காகவுமே தியாகம் செய்துள்ளேன்.

தற்போது எனது இரு முதன்மை சமூக ஊடகக் கணக்குகளும் தீயவர்களால் முடக்கப்பட்டு, அழிக்கப்பட்டுவிட்டன. என்னிடம் தற்போது எஞ்சியிருப்பது இந்தத் துறவற ஆடை மட்டும்தான். உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டதால் வேறு வழியின்றி எனது சகோதரனின் இல்லத்தில் தங்கியிருந்தேன். இன்று எனது விகாரைபணி சபையினர் எனக்கு உத்வேகத்தை அளித்துள்ளனர். அவர்களின் வார்த்தைகளை நம்பியே, இன்று எனது கிராம மக்களுடன் மீண்டும் விகாரைக்கு எழுந்தருளத் தீர்மானித்துள்ளேன்’ என தெரிவித்தார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இந்தியாசினிமாமுக்கியச் செய்திகள்

பின்னணிப்பாடகி ஜானகி அம்மாவின் உடலுக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

ஆடி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காந்தி பூங்காவிற்கு அருகிலுள்ள வாவியில் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

வைகாசி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கோட்லோச் தமிழ் வித்தியாலயத்தில் புதிய நுழைவாயில் திறப்பு விழா

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அமெரிக்க தபால் சேவைக்கு அனுப்பப்பட்ட 625,000 டொலர் மாயம்: விசாரணைகள் தீவிரம்

சித்திரை 28, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube