நீர்கொழும்பு சிறைச்சாலையில் இருந்து இன்று (08) புதன்கிழமை 68 கைதிகள் குருவிட்ட சிறைச்சாலைக்கு இடமாற்றப்பட்டுள்ளனர்.
பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் கைதிகள் அழைத்து செல்லப்பட்டனர். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுடைய பெயர் பட்டியலை பொலிசார் உறவினர்களுக்கு வழங்கியுள்ளனர் .
நீர்கொழும்பு சிறைச்சாலைக்கு அருகில் எவரும் செல்வதற்கு அனுமதிக்கப்படவில்லை என பொலிஸார் மற்றும் அதிரடிப்படையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
