Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

வெப்பநிலை தொடர்பான அறிவிப்பு!

ஆடி 9, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை மாவட்டங்களின் சில பகுதிகளில் இன்று  (09) மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை, அவதானம் மட்டத்தை எட்டும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

உலகளாவிய காலநிலைக் கணிப்பு மாதிரிகளின் தரவுகள், வளிமண்டல ஈரப்பதம் மற்றும் அதிகபட்ச வெப்பநிலை ஆகியவற்றின் அடிப்படையில் இந்த வெப்பச் சுட்டெண் கணக்கிடப்பட்டுள்ளது.

இது குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் ஆலோசனைகளை வழங்கியுள்ளது.

திறந்த வெளியில் தொழில் புரிவோர் அடிக்கடி போதியளவு நீரைப் பருக வேண்டும்.

நிழலான இடங்களில் ஓய்வெடுக்க வேண்டும்.

வீட்டில் உள்ள முதியவர்கள் மற்றும் நோயாளிகளின் உடல்நிலை குறித்து அதிக கவனம் செலுத்த வேண்டும்.

சிறுவர்களை வாகனங்களுக்குள் தனியாக விட்டுச் செல்ல வேண்டாம்.

வெயிலில் அதிக சிரமத்தைக் கொடுக்கும் வேலைகளைத் தவிர்க்க வேண்டும்.

வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது மென்மையான நிறத்திலான பருத்தி ஆடைகளை அணிவது சிறந்தது

போன்ற ஆலோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

வெப்பநிலை அதிகரிப்பின் போது உடல்நலத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து பொதுமக்கள் அவதானமாக இருக்குமாறும், அசௌகரியங்கள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனைகளைப் பெறுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு நகரில் கார் – மோட்டார் சைக்கிள் விபத்து: இருவர் படுகாயம்

ஆனி 10, 2026
இலங்கைஎங்கள் ஊர்

வாத்துவ தாக்குதல் சந்தேகநபர் விளக்கமறியலில்; உயிரிழப்பு வதந்தியை மறுத்த பொலிஸார்!

ஆனி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2030க்குள் கதிர்காமத்தை பிளாஸ்டிக் அற்ற வலயமாக மாற்ற திட்டம்!

ஆடி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இனி வீட்டில் இருந்தவாறே உங்கள் தூரப்பயணத்திற்கான ஆசனங்களை முன்பதிவு செய்யலாம்!

வைகாசி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube