அரச பல்கலைக்கழகங்களில் பயிலும் மாற்றுத்திறனாளி மாணவர்களின் கல்விக்கனவுகளுக்கு வலுசேர்க்கும் வகையில், ஜனாதிபதி நிதியத்தினால் “சரசவி திரியோ அபிமன்” என்ற விசேட கல்வி உதவித்தொகைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இத்திட்டத்தின் தொடக்க விழா பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் ஜூலை 11 சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.
இத்திட்டத்தின் கீழ் தகுதிபெற்றுள்ள சுமார் 400 மாணவர்களில், முதற்கட்டமாக 254 மாணவர்கள் இந்த நிகழ்வில் பாராட்டப்படவுள்ளனர். தெரிவுசெய்யப்பட்ட ஒவ்வொரு மாணவருக்கும் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் 1 இலட்சம் ரூபா கல்வி உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
கொழும்புக்கு வருகை தருவதில் உள்ள போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்திற்கொண்டு, வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த மாணவர்களுக்கான விசேட நிகழ்வுகள் வரும் ஆகஸ்ட் மாதத்தில் அந்தந்தப் பகுதிகளில் நடத்துவதற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.
