Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

குழந்தைகளுக்கான விசேட மலேரியா மருந்து!

Malaria Medicine | Babies | WHO | Malaria Day | World | Quick Tamil News

ஏப்ரல் 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சர்வதேச மலேரியா தினத்தை முன்னிட்டு, கைக்குழந்தைகளுக்காக விசேடமாக உருவாக்கப்பட்ட முதலாவது மலேரியா மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளது.

புதிதாக உருவாக்கப்பட்ட இந்த மருந்து, 05 கிலோ கிராமிற்கும் குறைவான எடையுள்ள குழந்தைகளுக்குப் பாதுகாப்பான முதல் மலேரியா எதிர்ப்பு மருந்தாகும்.

குறித்த இந்த மருந்து ஆர்டிமெதர் மற்றும் லுமெஃபான்ட்ரின்ஆகியவற்றால் உருவாக்கப்பட்டுள்ளது.

இதுவரைகாலமும் வளர்ந்த குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்ட மருந்துகளே கைக்குழந்தைகளுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில் இந்த மருந்தின் கண்டுபிடிப்பு ஒரு திருப்புமுனையாக அமைந்துள்ளது.

இந்த மருந்துக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியுள்ளமை முழுமையான மருத்துவச் சோதனைகளை நடத்தும் வசதியற்ற நாடுகளும் இந்த மருந்தை உத்தியோகபூர்வமாக உபயோகிக்க அனுமதி கிடைத்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையின் முகவர் நிறுவனங்கள் இந்த மருந்தைக் கொள்வனவு செய்து, மலேரியா அதிகம் பரவியுள்ள பகுதிகளுக்கு விநியோகிக்கவும் வழிவகுத்துள்ளது.

ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளே மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினராக உள்ளனர். நுளம்புகளால் பரவும் இந்த நோய் தொடர்பான மொத்த மரணங்களில் சுமார் 70 சதவீதம் இவர்களிடமே நிகழ்கின்றன.

கர்ப்ப காலத்தில் மலேரியா பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. ஒவ்வொரு வருடமும் இது சுமார் 10,000 தாய்மார்களின் மரணம், 200,000 கருச்சிதைவுகள் மற்றும் சுமார் 550,000 குழந்தைகள் குறைந்த எடையுடன் பிறப்பதற்கு மலேரியா ஒரு முக்கிய காரணமாகியுள்ளதாக உலக சுகாதார அமைப்பின் தரவுகள சுட்டிகாட்டியுள்ளன.

2000-ஆம் ஆண்டிலிருந்து, உலகளாவிய ரீதியில் முன்னெடுக்கப்படும் முயற்சிகள் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு வழிவகுத்துள்ளன. இதன் மூலம் சுமார் 14 மில்லியன் இறப்புகள் தவிர்க்கப்படும் என உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.

எனினும், மலேரியா ஒரு பெரிய உலகளாவிய சுகாதார சவாலாகவே நீடிக்கிறது. 2024-ஆம் ஆண்டில் சுமார் 282 மில்லியன் பாதிப்புகளும், அரை மில்லியனுக்கும் அதிகமான இறப்புகளும் பதிவாகியுள்ளன.

உலகளவில் ஏற்படும் மலேரியா பாதிப்புகள் மற்றும் இறப்புகளில் பத்தில் ஒன்பது ஆபிக்க கண்டத்தில் துணை சஹாரா ஆபிரிக்க பிராந்தியத்தில் பதிவாகின்றன.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய் திங்கள் ஞாயிறு சனி வெள்ளி வியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலை சி.டி.ஸ்கேன் நிதி முறைகேடு விவகாரம் – விசாரணைகள் ஆரம்பம்

செப்டம்பர் 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கறுப்பு ஜூலை கலவரம் குறித்து விசாரணை:  51 ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கோரிக்கை

அக்டோபர் 10, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

இந்திய ‘கரப்பான் பூச்சி ஜனதா கட்சி’யின் மாபெரும் பேரணி

ஜூலை 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் –அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி

ஆகஸ்ட் 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube