Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

டெங்கு நோயாளர்களை அனுமதிக்க ஐ.டி.எச் மருத்துவமனை தயார்நிலையில்!

ஆடி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டில் அதிகரித்து வரும் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையைக் கருத்திற் கொண்டு, கொழும்பு ஐ.டி.எச் தொற்றுநோய் ஒழிப்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் டெங்கு அல்லாத பிற நோயாளர்களை முல்லேரியா வைத்தியசாலைக்கு உடனடியாக இடமாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

ஐ.டி.எச் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் டெங்கு நோயாளர்களுக்கு கூடுதல் நேரத்தையும், தீவிர கவனத்தையும் செலுத்தி சிகிச்சையளிப்பதற்காகவே இந்த அவசர முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அதன் பதில் பணிப்பாளர் வைத்தியர் கபில கன்னங்கர தெரிவித்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை காலை வரை இலங்கையில் பதிவாகியுள்ள டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 67,143 ஆக உயர்வடைந்துள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கையும் 47 ஆக அதிகரித்துள்ளது. இம்மாதத்தின் முதல் பத்து நாட்களுக்குள்ளேயே 11,764 புதிய நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

முன்னதாக ஜூன் மாதத்தில் மாத்திரம் அதிகபட்சமாக 21,538 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருந்தனர்.

ஒட்டுமொத்த நோயாளர்களில் 52.76 சதவீதமானோர் மேல் மாகாணத்திலேயே இனங்காணப்பட்டுள்ளனர். அதற்கமைய அங்கு 35,427 நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.

அடுத்தபடியாக தென் மாகாணத்தில் 10,512 நோயாளர்களும், சப்ரகமுவ மாகாணத்தில் 5,681 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

மாவட்ட மட்டத்தில் கம்பஹா மற்றும் கொழும்பு மாவட்டங்கள் மிக மோசமான பாதிப்பை எதிர்கொண்டுள்ளன. கம்பஹா மாவட்டத்தில் 13,795 நோயாளர்களும், கொழும்பு மாவட்டத்தில் 13,563 நோயாளர்களும் பதிவாகியுள்ளனர்.

நாட்டில் 175 சுகாதார பிரிவுகள் டெங்கு நோய் பரவும் அதிக அவதானம் மிக்க வலயங்களாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சமிந்த விஜேசிறிக்கு ஒன்றரை வருட சிறைத்தண்டனை

ஆடி 28, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சோள வரி உயர்வு, அரிசி இறக்குமதியால் ஏழைகள் பாதிப்பு – ஹர்ஷ விமர்சனம்!

ஆனி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

நாட்டின் சில பகுதிகளில் இன்று இடியுடன் கூடிய மழை!

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

புத்தூரில் இடம்பெற்ற கோர விபத்தில் மூவர் படுகாயம்

ஆனி 5, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube