Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைவானிலை

கடற்பகுதிகளில் அதிக காற்று வீசும் சாத்தியம்!

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நாட்டின் பல பகுதிகளில் இன்றைய தினம் மழையுடன் கூடிய வானிலை நிலவும் சாத்தியமுள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. சப்ரகமுவ மாகாணத்திலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும்.

மேல் மற்றும் வடமேல் மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என்பதுடன் நாட்டின் ஏனைய பகுதிகளில் வறண்ட வானிலை நிலவும் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

நீர்கொழும்பிலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையான கடற்பரப்புகளில் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

காற்றானது தென்மேற்கு திசையிலிருந்து வீசுவதுடன், காற்றின் வேகமானது மணிக்கு (30-40) கிலோமீற்றராகக் காணப்படும். சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு (50-60) கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணிக்கு 50 கிலோமீற்றர் வரை அதிகரிக்கக் கூடும்.

சிலாபத்திலிருந்து புத்தளம் ஊடாக காங்கேசன்துறை வரையான மற்றும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும். நாட்டைச் சுற்றியுள்ள ஏனைய கடற்பரப்புகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படலாம்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கை

வத்தளை துப்பாக்கிச் சூடு சம்பவம்: சந்தேகநபர் ஒருவர் கைது!

ஆடி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைத் தொழில்சார் நிபுணர்களின் சங்கத்தின் 39ஆவது வருடாந்த மாநாடு

ஆவணி 12, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மழை, காற்றுடனான வானிலை நாளை முதல் அதிகரிக்கும்

ஆவணி 5, 2026
இலங்கை

6 மாதங்களில் ரூ.1,373.7 பில்லியன் வருமானம்: இலக்கை விஞ்சிய இலங்கை சுங்கம்!

ஆடி 4, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube