சென்னையில் போலி முகவரி ஆவணங்களை பயன்படுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெற்றதாக யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த இலங்கைத் தம்பதியினர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 20 ஆண்டுகளாக சென்னை தியாகராயநகர் பகுதியில் வசித்து வந்த 69 வயதுடைய நபரும் அவரது மனைவியும், முறையான குடியுரிமை ஆவணங்கள் இன்றி வாக்காளர் பட்டியலில் இணைந்து தமிழக தேர்தலில் வாக்களித்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
இலங்கை திரும்புவதற்காக சென்னை விமான நிலையம் சென்றபோது இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
