Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்

ஆடி 13, 2026
படிக்க 1 நிமிடங்கள்

நிரந்தர நியமனம் வழங்குவதற்கான நேர்முகப் பரீட்சை மற்றும் அதனோடு இணைந்த நடைமுறைகளில், தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகக் கூறி, திருகோணமலை மாவட்டத்தின் அரசாங்க வைத்தியசாலைகள் மற்றும் பொது மருத்துவ அதிகாரி அலுவலகங்களில், 2019ஆம் ஆண்டு முதல் தொண்டர் அடிப்படையில் கடமையாற்றி வரும் சுகாதார பணியாளர்கள், இன்று (13)உள்துறைமுக வீதியில் அமைந்துள்ள கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் முன்பாக கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சுகாதாரப் பணியாளர் ஒருவர் கூறுகையில்,

“180 சுகாதாரப் பணியாளர்கள், கொடுப்பனவுகள் எதுவும் இன்றி மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களில், பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் பணியாற்றி வருகின்றோம்.

எமக்கு நிரந்தர நியமனத்தின்போது முன்னுரிமை வழங்கப்படும் என்று நாம் தொண்டர் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டபோது கூறப்பட்டது. இதனை நம்பி 7 ஆண்டுகளாக தொடர்ச்சியாக பணியாற்றுகின்றோம்.

பிரதேச மருத்துவ தாதியருடன் இணைந்து கர்ப்பிணித் தாய்மாருக்கான அனைத்து சேவைகளையும் கிராமங்களுக்கு கால்நடையாக சென்று வழங்கி வருகின்றோம்.

எங்களுக்கும் குடும்பங்கள் உள்ளன. தேவைகள் உள்ளன. ஆனால், வருமானம் இல்லை. ஒரே ஒரு நம்பிக்கை இருந்தது. நிரந்தர நியமனம் கிடைக்கும் என்று. அதுவும் தற்போது எமக்கு கிடைக்காது போல் உள்ளது. எனவே எமக்கு நீதி கிடைக்க வேண்டும்” என்று கூறினார்.

இதேவேளை இதைப் பற்றி கிழக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் எச்.ஈ.எம்.டபிள்யூ.ஜி.திசாநாயக்காவிடம் கேட்கப்பட்டபோது அவர் கூறுகையில்,

“தற்போது சுகாதாரப் பணியாளர்களுக்கான நேர்முகப் பரீட்சை மத்திய சுகாதார அமைச்சினால் நடத்தப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் நியமனம் வழங்கப்படவுள்ளது.

இந்த நியமனத்தை வழங்குவது மத்திய அரசாங்கமே. மாகாண சபைக்கு இந்த நியமனத்தை வழங்கும் அதிகாரம் இல்லை. எனவே நடந்து முடிந்த நேர்முகப்பரீட்சை மற்றும் வழங்கப்படவுள்ள நியமனம் என்பவை குறித்து எம்மால் எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாது” என குறிப்பிட்டார்.

இதேவேளை கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் 4 பிரதிநிதிகள் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சுக்கு சென்று, தமது கோரிக்கை அடங்கிய மனுவை செயலாளரிடம் வழங்கினர்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை–பிரித்தானிய உறவுகள் குறித்து உயர்ஸ்தானிகருடன் ஜீவன் தொண்டமான் சந்திப்பு

ஆடி 22, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காலி பிரபல பாடசாலை ஆசிரியர் ஒருவர் மாணவிகளின் சீருடையில் சிவப்பு மையினை தெளித்தார் என்ற குற்றச்சாட்டில் கைது!

சித்திரை 30, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா காலமானார்!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜனாதிபதி பங்கேற்ற உபசம்பதா விழா

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube