லிந்துலையில் நீரில் மூழ்கி காணாமல் போன சிறுவனை இரண்டாவது நாளாகவும் தேடும் பணிகள் தொடர்கின்றன.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவர் ஒருவர் பரீட்சை முடிந்த பின்னர் நண்பர்களுடன் ஆற்றில் குளிக்கச் சென்ற போது காணாமல் போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதனை தொடர்ந்து தீவிரமாகக் தேடியும் மாணவனின் உடலை கண்டறிய முடியவில்லை போதிய வெளிச்சம் இல்லாததால் இரவு தேடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இன்றைய தினமும் மாணவனை தேடும் பணிகள் தொடர்கின்றறன.
