Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

7 மாதங்களில் 1.2 மில்லியன் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை!

ஆடி 14, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இவ்வருட ஆரம்பம் முதல் இம்மாதம் வரை இதுவரை நாட்டுக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1.2 மில்லியன் என்ற எல்லையைக் கடந்துள்ளது.

இதற்கமைய, ஜனவரி 01ஆம் திகதி முதல் ஜூலை 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் நாட்டிற்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1,217,956 ஆக பதிவாகியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜூலை 01ஆம் திகதி முதல் 12ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் மட்டும் 71,383 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதாக அந்த அதிகார சபை குறிப்பிட்டுள்ளது.

ஜூலை மாதத்தில் இதுவரை 16,610 இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இரண்டாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் ஐக்கிய இராச்சியத்திலிருந்து வருகை தந்துள்ளனர் என்பதுடன், அந்த எண்ணிக்கை 7,296 ஆகப் பதிவாகியுள்ளது.

மூன்றாவது அதி கூடிய சுற்றுலாப் பயணிகள் அவுஸ்திரேலியாவிலிருந்து வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 4,656 ஆகும்.

இதேவேளை, இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் ஒட்டுமொத்தமாக அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் இந்தியாவிலிருந்தே வருகை தந்துள்ளனர். அந்த எண்ணிக்கை 310,293 ஆகும்.

இதற்கு மேலதிகமாக, ஐக்கிய இராச்சியத்திலிருந்து 115,863 சுற்றுலாப் பயணிகளும், சீனாவிலிருந்து 80,487 சுற்றுலாப் பயணிகளும் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.

அத்துடன், இந்த ஆண்டின் கடந்துள்ள காலப்பகுதியில் அதிகளவிலான சுற்றுலாப் பயணிகள் வருகை தந்த மாதமாக பெப்ரவரி மாதம் பதிவாகியுள்ளதுடன், அந்த எண்ணிக்கையானது 279,328 ஆக பதிவாகியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

பேனா வடிவிலான கைத்துப்பாக்கியுடன் ஓவியர் கைது!

வைகாசி 15, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிப்பது தொடர்பாக அமலிச்சரவை பத்திரம்

ஆடி 26, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

ஆளுநர் மாளிகையில் காத்திருக்கும் விஜய்!

வைகாசி 7, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு மாநகர சபை ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் காலம் மேலும் 6 மாதங்களுக்கு நீடிப்பு!

ஆனி 29, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube