இலங்கையில் தங்கத்தின் விலை இன்று வெள்ளிக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளதாக அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி நேற்று 24 கரட் தங்கம் ஒரு பவுண் 377,000 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 3,000 ரூபா குறைந்து 374,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
இதேவேளை 22 கரட் தங்கம் ஒரு பவுண் 346,800 ரூபாவாக விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று அதன் விலை 2,800 ரூபா குறைந்து 344,000 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 46,750 ரூபாவாக, 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 43,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
