தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை வழங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்தியா மற்றும் இலங்கை இடையே கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் சுகாதார, ஊடக அமைச்சின் செயலாளர் மருத்துவர் அனில் ஜாசிங்க ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் (13) இடம்பெற்ற நிகழ்வில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் மருத்துவர் நளிந்த ஜயதிஸ்ஸவும் கலந்து கொண்டார்.
அனர்த்த சூழ்நிலை காரணமாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ள தெனியாய ஆதார வைத்தியசாலைக்கு தேவையான மருத்துவ உபகரணங்களை இந்திய அரசு இந்த ஒப்பந்தத்தின் மூலம் வழங்கவுள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
