Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

பட்டத்தின் நூல்கள் சிக்கியதால் விமானம் அவசரமாக தரையிறக்கம் !

#AviationNews #FlightSafety #EmergencyLanding #KiteStringHazard #AircraftSafety #AirSafety #SriLankaNews #BreakingNews #FlightIncident #PublicSafety

ஆடி 15, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரத்மலானை விமான நிலையத்திலிருந்து இன்று (15) பயிற்சிக்காகப் பறக்கவிடப்பட்ட Y-12 ரக விமானம் ஒன்றில் பட்டம் விடும் நூல்கள் சிக்கியதால், அவ்விமானம் அவசரமாக மீண்டும் தரையிறக்கப்பட்டுள்ளது.

அதன்பின்னர் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்பப் பரிசோதனையின் போது, விமானத்தின் இடது பக்க சக்கரம், இடது பக்க எஞ்சின் பகுதி மற்றும் மேலும் சில பாகங்களில் பெருமளவிலான பட்டத்து நூல்கள் சிக்கியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இது தொடர்பாக விமானப்படை வெளியிட்டுள்ள அறிக்கையில், விமானத்தின் எஞ்சின் அல்லது அதன் செயல்பாட்டுத் தொகுதிக்குள் பட்டத்து நூல்களோ அல்லது பட்டத்தின் பாகங்களோ நுழைந்தால், முழு விமானமும் விபத்துக்குள்ளாகும் நேரடி அபாயம் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளது.

தற்போது நிலவும் பட்டம் விடும் காலப்பகுதியுடன், நாட்டின் விமான ஓடுதளங்கள் மற்றும் விமான நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் பட்டம் விடுவது அதிகரித்துள்ளமையால், விமானங்களின் பாதுகாப்பிற்குப் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

உலகளவில் விமான விபத்துக்கள் ஏற்படுவதற்கு விமான ஓடுதளங்களுக்கு அருகில் பட்டம் விடுவது ஒரு முக்கிய காரணமாக அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், இது விமானப் பறப்பு நடவடிக்கைகளுக்கு நேரடித் தடையாகவும் அமைகிறது.

இதன்படி கட்டுநாயக்க, இரத்மலானை, இங்குராக்கொட, சீனக்குடா, அநுராதபுரம், பலாலி, கத்துக்குருந்த, கொக்கலை, வவுனியா, வீரவில மற்றும் மத்தள ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள விமான ஓடுதளங்களைச் சுற்றி அதிகளவில் பட்டம் விடுவது தற்போது அதிக ஆபத்தான நிலையை ஏற்படுத்தியுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஜப்பானில் 5.9 அளவில் நிலநடுக்கம்!

வைகாசி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராணுவ சிப்பாய் ஒருவரைக் கடத்திச் சென்ற நபர் கைது!

ஆனி 9, 2026
இலங்கைஉலகம்

தொழிலாளர் உரிமைகள் உடன்படிக்கைகள் தொடர்பில் இலங்கைக்கு ILO தலைமைப் பணிப்பாளர் பாராட்டு!

ஆனி 10, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

சீனா- திபெத் விவகாரம் எங்கள் பிரச்சினை- 3வது நாடு தலையிடக் கூடாது என சீனா திட்டவட்டம்

ஆடி 9, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube