Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஇலங்கை

இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் நிறைவு – 4000 மக்களிடம் கையளிப்பு !

சித்திரை 19, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மலையக பெருந்தோட்டப் பகுதிகளில் இந்திய அரசாங்கத்தின் நிதியுதவியுடன் முன்னெடுக்கப்பட்டு வந்த இந்திய வீடமைப்புத் திட்டத்தின் மூன்றாம் கட்டம் இன்று (ஏப்ரல் 19) உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்தது.

ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களை மையமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இத்திட்டத்தின் கீழ் 4,000 வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.

இதில் எஞ்சியிருந்த 145 வீடுகள், இலங்கை வந்துள்ள இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன் தலைமையில் இன்று நிகழ்நிலை (Online) ஊடாக மக்களிடம் கையளிக்கப்பட்டன.

கொவிட்-19 மற்றும் பொருளாதார நெருக்கடி காரணமாக, ஒரு வீட்டை நிர்மாணிப்பதற்கான நிதியை இந்திய அரசாங்கம் 2.8 மில்லியன் ரூபாவாக அதிகரித்து வழங்கியமையால் இத்திட்டம் வெற்றிகரமாகப் பூர்த்தியடைந்துள்ளது.

ஏற்கனவே முதலாம், இரண்டாம் கட்டங்களில் 46,000 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் உறுதிமொழிக்கு அமைய, 10,000 வீடுகளை நிர்மாணிக்கும் நான்காம் கட்டப் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெருந்தோட்டப் பகுதிகளில் மொத்தமாக 60,000 வீடுகளை நிர்மாணிக்கும் இந்திய அரசாங்கத்தின் பாரிய இலக்கின் ஒரு பகுதியாக இந்தத் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
ஞாயிறுசனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறைச்சாலைகளை சிறப்பாக வழிந்த எங்களுக்கு சிறந்த அனுபவம் உண்டு – நாமல் ராஜபகஷ

ஆடி 21, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கனடாவில் யூத ஆலய துப்பாக்கிச் சூட்டில் முன்னாள் ராணுவ வீரர் சிகிச்சை பலனின்றி பலி

புரட்டாதி 23, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

5 மாதங்களில் 1.95 இலட்சம் சமூக வலைதளக் கணக்குகளை முடக்க மத்திய அரசு உத்தரவு

ஆவணி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

மாமாங்கேஸ்வரர் ஆலயப் புட்டின் விலையை ரூ.150 ஆகக் குறைக்க கோரிக்கை

ஆவணி 6, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube