Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இன்று சர்வதேச தொழிலாளர் தினம்

வைகாசி 1, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுத்த நாளாக இன்று மே தினம் அனைத்துலக ரீதியாக கொண்டாடப்படுகின்றது.

சர்வதேச தொழிலாளர் தினம் இன்றாகும்.

18ஆம் நூற்றாண்டு காலப்பகுதியில் 12 முதல் 18 மணிநேர கட்டாய தொழில் நிர்ப்பந்தத்திற்கு எதிராக ஏற்பட்ட புரட்சியே மேதின உருவாக்கத்தின் ஆரம்பமாக இருந்தது.

அமெரிக்காவில் 1832இல், பொஸ்டனில் கப்பலில் பணியாற்றிய தச்சுத் தொழிலாளர்கள், 10 மணி நேர தொழில் கோரிக்கையை முன்வைத்து பணிநிறுத்தம் செய்தனர்.

இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து ‘அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு’என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.

இந்த இயக்கம் 8 மணிநேர தொழில் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்டங்களை நடத்தியது.

1886ஆம் ஆண்டு மே முதலாம் திகதி நாடு தழுவிய பணி நிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது.

இந்த இயக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.

1886ஆம் ஆண்டுஇ மே மாதம் 4 திகதி,இலட்சக்கணக்கான தொழிலாளர்கள் அணிதிரண்டு, சிக்காக்கோ நகரில் போராட்டம் நடத்தினர்.

ஆயுத பலத்தினால், இந்தத் போராட்டம் முடிவுக்கு கொண்டுவரப்பட்டது.

இதன்போது பெருமளவான தொழிலாளர்கள் கொல்லப்பட்டதுடன், காயங்களுக்கும் உள்ளாகினர்.

1889 ஜூலை 14 அன்று பாரிசில் சோசலிச தொழிலாளர்களின் ‘சர்வதேச தொழிலாளர் நாடாளுமன்றம் கூடியது.

இதன்போது, 1890 ஆம் ஆண்டு மே மாதம் முதலாம் திகதி, அனைத்துலக ரீதியில் தொழிலாளர்கள் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.

இதுவே பின்னர் மே ஒன்று தொழிலாளர் தினமாக அறிவிக்கப்பட்டது.

இலங்கையில், 1934 ஆம் ஆண்டு, முதல் முறையாக சர்வதேச தொழிலாளர் தினம் கொண்டாடப்பட்டது.

1956 ஆம் ஆண்டு,சர்வதேச தொழிலாளர் தினம்,  அரச விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் இன்றைய தினம் அரசியல் கட்சிகள் மற்றும் தொழிற்சங்கங்கள் என்பன கூட்டங்கள், பேரணிகள் என்பவற்றுக்கு ஏற்பாடு செய்துள்ளன.

தொழிலாளர் உரிமைகள் வென்றெடுக்க பட்ட இந்நாளில், நாட்டுக்காகவும் வீட்டுக்காகவும் பாடுப்படும் தொழிலாளர்களுக்கு Quick தமிழ் செய்திகளின்
தொழிலாளர் தின நல்வாழ்த்துக்கள்!

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைஉலகம்

அதிக விலைக்கு டீசல் கொள்வனவு செய்யப்பட்டதை ஏற்றுக்கொண்டார் பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர்!

சித்திரை 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கிழக்கு மாகாண விசேட காணிக்குழு தீர்மானத்தை ரத்து செய்யுமாறு ஜனாதிபதிக்கு அவசர கடிதம்!

ஆனி 29, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

அரச சேவை ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்

ஆடி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

2026 மூன்றாம் தவணை ஆரம்பத் திகதி அறிவிப்பு!

ஆடி 23, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube