Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பு – டேம் வீதி கட்டிடம் ஒன்றில் பாரிய தீவிபத்து!

Colombo | Dam Street | Fire Accident | Srilanka | QuickTamilNews

வைகாசி 11, 2026
படிக்க 1 நிமிடங்கள்

கொழும்பு, டேம் வீதி பொலிஸ் நிலையத்துக்கு முன்னால் உள்ள கட்டடம் ஒன்றில் இன்று (11) திங்கட்கிழமை மாலை பாரிய தீ விபத்து இடம்பெற்றுள்ளது.

தீ விபத்து தொடர்பில் தகவல் கிடைத்தவுடன், கொழும்பு தீயணைப்புப் படையினர் விரைந்து செயற்பட்டுள்ளனர். தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக இதுவரையில் குறைந்தது 10 தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகத் தீயணைப்புப் படைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தத் தீ விபத்தினால் இதுவரை எவருக்கும் காயங்களோ அல்லது உயிரிழப்புகளோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை. எனினும், கட்டடத்திற்கு ஏற்பட்டுள்ள சேத விபரங்கள் இன்னும் முழுமையாகத் தெரியவரவில்லை.

குறித்த கட்டடத்தில் தீப்பிடித்தமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. பொலிஸாரும் தீயணைப்புப் படையினரும் இணைந்து தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதுடன், விபத்து குறித்து மேலதிக விசாரணைகளை டேம் வீதி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

சஹஸ்புர கொலைச் சம்பவம் தொடர்பில் இருவர் கைது!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள சாரதிகளுக்கு அரசாங்கத்திடம் இருந்து சம்பளம் – வெளியான அதிர்ச்சி தகவல்!

வைகாசி 30, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இராஜகிரிய பகுதியில் கைது செய்யப்பட்ட 120 வெளிநாட்டவர்களுக்கு விளக்கமறியல்!

வைகாசி 4, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

6,268 இடங்களில் டெங்கு அபாயம்!

ஆனி 11, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube