Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

தேசிய போர் வீரர்கள் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

வைகாசி 18, 2026
படிக்க 1 நிமிடங்கள்

தேசிய போர் வீரர்கள் நினைவு தின ஒத்திகைப் பணிகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச உள்ளிட்ட குழுவினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நாளை (19) ஜனாதிபதி தலைமையில் நடைபெறவுள்ள பிரதான நினைவேந்தல் நிகழ்வுக்கான ஒத்திகைகள் இன்று (18) பாராளுமன்ற விளையாட்டு மைதானத்தில் உள்ள போர் வீரர்கள் நினைவிடத்தில் நடைபெற்றன.

இதன்போது, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச உள்ளிட்ட சுமார் 35 பேர் அடங்கிய குழுவினர், உரிய அனுமதியின்றி வளாகத்துக்குள் நுழைய முற்பட்டு அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்துள்ளதாக பொலிஸ் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்போது உடனடியாகச் செயற்பட்ட பொலிஸார், அவர்களின் முயற்சியை முறியடித்து அங்கிருந்தவர்களை வெளியேற்றியுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் மேலதிக சட்ட நடவடிக்கைகள் தொடரவுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
சனிவெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை ரூபாயின் மதிப்பு சற்று வீழ்ச்சி

புரட்டாதி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

இறந்துவிட்டதாக கருதப்பட்ட நபர் இறுதிச் சடங்கின் பின்னர் உயிருடன் வீட்டுக்கு திரும்பிய விசித்திரம்

புரட்டாதி 19, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

போலி வெளிநாட்டு கடவுச்சீட்டு விவகாரம் – குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரியொருவர் கைது!

ஆடி 6, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

திருமண ஊர்வலத்தில் துப்பாக்கிச்சூடு – மணமகன் உயிரிழப்பு!

வைகாசி 2, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube