Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

இரு பெண்களை கொலை செய்த வழக்கில் தேடப்பட்ட சந்தேக நபர் 3 வருடங்களின் பின்னர் கைது!

வைகாசி 26, 2026
படிக்க 1 நிமிடங்கள்

இரு பெண்களின் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் ஒருவர், 3 வருடங்களின் பின்னர் கடந்த சனிக்கிழமை மதுகம – வெலிகந்த பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டு (24) ஞாயிற்றுக்கிழமை லிந்துலை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கொழும் – ஹோமாகம பிரதேசத்தை சேர்ந்த 47 வயதான மகேஷ் அசலங்க டி சொய்சா என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இவரிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர், நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய நிலையில், எதிர்வரும் ஜூன் மாதம் 09 ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.

தலவாக்கலை கிரேட் வெஸ்டன் (Great Western) மலையின் உச்சியில் (2023) ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 01 ஆம் திகதி பெண்ணொருவரின் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு சம்பவம் தொடர்பில் தேடப்பட்டுவந்த சந்தேக நபரும் , தலங்கம பொலிஸ் பிரிவில் 57 வயதான பெண்ணொருவரை கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்ட தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

மத்திய மாகாண குற்றப் புலனாய்வுப் பிரிவின் சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் தலைமையிலான குழுவினரே குறித்த இரட்டை கொலை சம்பவங்களுடன்தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ளனர். பொலிசாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவல்களை அடிப்படையாகக்கொண்டு இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தொடர்ந்து லிந்துலை பொலிஸார் தடுப்புக்காவல் உத்தரவில் வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட நிலையில் இன்று (26) நுவரெலியா மாவட்ட பொது வைத்திய சாலையில் சட்டவைத்திய அதிகாரியின் (JMO) பரிசோதனையை மேற்கொண்டு பின்னர் நுவரெலியா மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்திய போது எதிர் வரும் ஜூன் மாதம்(9) ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த இரு கொலை தொடர்பில் தொடர்ந்து லிந்துலை பொலிஸார் மற்றும் தலங்கம பொலிஸார் தொடர்ந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் .   

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு !

வைகாசி 18, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தேங்கிக்கிடக்கும் வாகனங்களை ஏலத்தில் விட தீர்மானம்

ஆடி 26, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

தங்காலை வீதி விபத்தில் இருவர் உயிரிழப்பு!

ஆடி 20, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆசிரியர் போட்டிப் பரீட்சை மூலம் அரசுக்கு 44 கோடி ரூபா இலாபம்!

ஆனி 1, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube