Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டு முறக்கொட்டாஞ்சேனை 8 வயது மகனுக்கு வாயில் சூடு வைத்த தந்தை கைது!!

வைகாசி 28, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு, முறக்கொட்டாஞ்சேனை பகுதியில் 8 வயது சிறுவன் ஒருவர் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வருவதாக ஆசிரியர் பெற்றோரிடம் முறைப்பாடு செய்ததையடுத்து, குறித்த சிறுவனுக்கு வாயில் குறுக்கால் கம்பியால் சூடு வைத்த தந்தையாரை இன்று வியாழக்கிழமை (28) கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

முறக்கொட்டாஞ்சேனை பிரதேசத்திலுள்ள பாடசாலை ஒன்றில் 3ம் தரத்தில் கல்வி கற்று வரும் 8 வயது சிறுவன் பாடசாலை வகுப்பறையில் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி வந்துள்ளார்.

இது தொடர்பாக குறித்த சிறுவனின் பெற்றோரிடம் ஆசிரியர் முறைப்பாடு செய்துள்ளதையடுத்து , சிறுவனின் தந்தை மகன் மீது கோபங் கொண்டு கடந்த செவ்வாய்க்கிழமை (26) மகனை பிடித்து இரும்பு கம்பியை சூடாக்கி அவரது வாயில் செங்குத்தாக சூடு வைத்துள்ளார்.

இவ்வாறு சிறுவனுக்கு நடந்த கொடூரம் அந்த பகுதி கிராம உத்தியோகத்தருக்கு தெரிய வந்த நிலையில் அவர் பொலிஸ் நிலையத்தில் இன்று வியாழக்கிழமை (28) முறைப்பாடு செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து பொலிஸார் சிறுவனின் தந்தையை கைது செய்ததுடன், பாதிக்கப்பட்ட சிறுவனை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை சந்திவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஆழ்கடலில் விபத்துக்குள்ளான பலநாள் மீன்பிடிக் கலன்கள் குறித்து தீவிர அவதானம்!

வைகாசி 23, 2026
இலங்கை

இலங்கையின் கறுவா துறையை மேம்படுத்த புதிய திட்டங்கள்: அமைச்சில் விசேட கலந்துரையாடல்!

ஆனி 11, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

ஹொரணை முதியோர் பராமரிப்பு இல்ல தீவிபத்து – இயக்குனர் கைது!

ஆனி 4, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

பாதுகாப்பு வாகனங்களை பாதியாக குறைக்க உத்தரவு – இந்திய பிரதமர் மோடி!

வைகாசி 13, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube