Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு என்னை அழையுங்கள் – நாமல்!

வைகாசி 29, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச, குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) செல்வதற்குத் தான் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும், அங்கு சென்று சிஐடி அதிகாரிகளிடமே பல அதிரடிக் கேள்விகளை கேட்க காத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

தன்னிடம் வாக்குமூலம் பெறுவதற்காகக் குற்றப்புலனாய்வு திணைக்களம் அழைப்பு விடுக்கும் வரை தான் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அவ்வாறு அழைக்கப்பட்டால் அங்குள்ள அதிகாரிகளிடம் நாட்டின் முக்கியச் சர்ச்சைகள் குறித்துச் சில கேள்விகளை முன்வைக்கப் போவதாகக் கூறியுள்ளார்.

முதலாவதாக, ‘பிள்ளையான்’ என்பவரிடம் வாக்குமூலம் பெறச் சென்ற அதிகாரி, நீதிமன்றத்தால் பிடியாணை (Warrant) பிறப்பிக்கப்பட்ட ஒரு நபரைச் சந்தித்திருந்தும், அவரை ஏன் உடனடியாகக் கைது செய்யவில்லை என்றும், ஒரு வெளிநாட்டுத் தூதரகத்தில் வைத்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டும் அந்த நபர் ஏன் சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டார்? என்பது குறித்தும் கேள்வி எழுப்பவுள்ளதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.

இரண்டாவதாக, உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான உளவுத்துறை அறிக்கைகள் முன்கூட்டியே வந்தபோது, அந்தப் பாரிய கோப்புகளை ஏன் சிஐடி மறைத்து வைத்திருந்தது? ஏன் அவை ஜனாதிபதியிடமோ அல்லது தேசியப் பாதுகாப்புச் சபையிடமோ சமர்ப்பிக்கப்படவில்லை? என்று அதிகாரிகளிடம் நேரடியாகக் கேட்க விரும்புவதாக அவர் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர், இப்ராஹிம் என்பவரைத் தங்களின் நாடாளுமன்ற தேசியப் பட்டியலுக்குப் பெயரிடும் போது, அவரது பிள்ளைகள் பயங்கரவாதச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்பது தேசிய மக்கள் சக்தி தலைமைக்குத் தெரியுமா? என்ற கேள்வியையும் அவர் முன்வைக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளைக் கேட்பதற்காவது சிஐடி தனக்கு உடனடியாக அழைப்பு விடுத்தால் அது மிகவும் சிறப்பாக இருக்கும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

மொனராகலை – சியம்பலாண்டுவ வீதியில் பஸ் விபத்து – கைக்குழந்தை உட்பட 26 பேர் காயம்! ​

வைகாசி 29, 2026
முக்கியச் செய்திகள்விளையாட்டு

டெஸ்ட் தொடருக்கான பாகிஸ்தான் அணி விபரங்கள் அறிவிப்பு!

ஆடி 5, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கொழும்பில் Parking கட்டணம் ரத்து செய்யப்படவில்லை!– மாநகர சபை அறிவிப்பு!

ஆடி 16, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

கபில சந்திரசேனவின் பூதவுடலுக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இறுதி அஞ்சலி!

வைகாசி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube