அட்டன் – கொட்டகலை பகுதியில் பெய்துவரும் அடைமழை காரணமாக லொக்கில் பகுதியில் வெள்ளநீர் புகுந்ததில் சுமார் 40 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
நேற்று (02) ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் பெய்த கடும் மழையால் வீதிகள் நீரில் மூழ்கியதுடன், போக்குவரத்து நடவடிக்கைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் பாதசாரிகள் மற்றும் வர்த்தக நிலைய உரிமையாளர்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொண்டுள்ள நிலையில், தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில குடும்பங்கள் தற்காலிகமாக பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளதுடன், அட்டன் – நுவரெலியா மற்றும் அட்டன் – கொழும்பு பிரதான வீதிகளிலும் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் மழையினால் மலையகப் பகுதிகளில் வெள்ளம் மற்றும் மண்சரிவு அபாயம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
