Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

புதிய தேயிலை அறுவடை விழா 2026

வைகாசி 31, 2026
படிக்க 2 நிமிடங்கள்

இலங்கையில் அதிகூடிய அந்நிய செலாவணியை ஈட்டித் தரும் தேயிலை உற்பத்தித் துறையில், சிறு தோட்ட உற்பத்தியாளர்களின் 60 சதவீத உற்பத்தி இரத்தினபுரியிலிருந்து பெறப்படுவதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

வருடாந்த புதிய தேயிலை அறுவடை விழா இன்று (31) சப்ரகமுவ மஹா சமன் தேவாலய பூமியில், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநரின் மக்கள் தொடர்பாடல் அதிகாரியும் முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான புஷ்பகுமார திசாநாயக்க மற்றும் இலங்கை தேயிலை சபையின் பணிப்பாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

விழாவில் உரையாற்றிய பிரதி அமைச்சர், இம்முறை புதிய தேயிலை விழா வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. உலகெங்கும் “இலங்கை தேயிலை” , “சிலோன் டீ” Ceylon Tea நாமத்தைக் கொண்டு சேர்ப்பதில் முன்னின்று உழைத்த இலங்கை தேயிலை சபைக்கு 50 ஆண்டுகள் நிறைவடையும் பொன் விழா ஆண்டு இந்த வருடமாகும் என குறிப்பிட்டார். இதனைக் குறிக்கும் முகமாக, 21.05.2026 உலக தேயிலை தினத்திற்கு இணையாக கொழும்பில் ஒரு நடைபவனியும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

“சிலோன் டீ” என்ற இந்த வர்தக நாமத்தின் பின்னால் இருப்பது, இந்நாட்டின் ஆயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளர்களினதும் மற்றும் சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களினதும் உழைப்பே. மலையக மக்களின் வீட்டுவசதி, கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளையும் அவர்களின் வாழ்கைத்தரத்தையும் உயர்துவதே எமது அமைச்சின் முதன்மையான பொறுப்பும் கொள்கையுமாய் இருக்கிறது. அவர்களை வலுப்படுதாமல் தேயிலைக் கைத்தொழிலின் எதிர்காலப் பயணத்தை முன்னெடுக்க முடியாது” எனவும் அவர் வலியுறுதினார். இலங்கையில் தேயிலை உற்பத்தியை 2030 ஆம் ஆண்டு 400 மெட்ரிக் டொன்னாக அதிகரிப்பதே எமது அரசாங்கத்தின் இலக்காகும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்

இந்த 50 ஆண்டுகால வரலாற்றுப் பயணத்தைத் திரும்பிப் பார்கும்போது, இலங்கை தேயிலை சபை ஆற்றிய சேவை அளப்பரியதாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன சடலமாக மீட்பு

வைகாசி 8, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

காணி உரித்து ஆவணங்கள் இல்லாத மக்களுக்கு உறுதிகள் வழங்கப்படல் வேண்டும்

வைகாசி 26, 2026
இலங்கை

சீன பாதுகாப்பு அதிகாரி–இலங்கை பாதுகாப்புச் செயலாளர் சந்திப்பு!

ஆனி 6, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

19 கோடி ரூபாய் பெறுமதியான போலி டொலர்களுடன் பெண்ணொருவர் கைது!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube