களுத்துறை, வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் அண்மையில் நபரொருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, துப்பாக்கிச் சூட்டை நடத்திய துப்பாக்கிதாரி களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மாலிகாவத்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை பரிசோதித்ததன் பின்னர் கிடைத்த தகவலின் அடிப்படையில், மாலிகாவத்தை பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்தபோதே இந்த சந்தேகநபர் களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
