Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

மட்டக்களப்பு மாநகர சபை பெண் உறுப்பினருக்கு வாட்சப்பில் ஆபாசப் படங்கள் அனுப்பி அவதூறு!

ஆனி 4, 2026
படிக்க 1 நிமிடங்கள்

மட்டக்களப்பு மாநகர சபையின் உறுப்பினர் தயாளகுமார் கௌரிக்கு, வாட்சப் (WhatsApp) சமூக ஊடகம் ஊடாக ஆபாச புகைப்படங்களை அனுப்பி அவதூறு விளைவிக்க முயன்ற நபருக்கு எதிராக நேற்று (03) புதன்கிழமை மட்டக்களப்பு கொக்குவில் பொலிஸ் நிலையத்தில் உத்தியோகபூர்வமாக முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

​சமூகத்தில் மக்கள் பிரதிநிதியாகவும், ஒரு பொதுச் செயற்பாட்டாளராகவும் அர்ப்பணிப்புடன் இயங்கி வரும் தனக்கே இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதெனில், சமூகத்தில் வாழும் சாதாரண பெண் பிள்ளைகளின் பாதுகாப்பு எவ்வாறு உறுதிப்படுத்தப்படும் என அவர் தனது முறைப்பாட்டில் மிகவும் ஆணித்தரமாகச் சுட்டிக்காட்டியுள்ளார்.

​எனவே, பெண்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்படுத்தும் வகையில் செயற்பட்ட சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக சட்டப்படியான கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

​இவ்விடயம் தொடர்பான உத்தியோகபூர்வ முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டுள்ள கொக்குவில் பொலிஸார், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளைத் தீவிரமாக ஆரம்பித்துள்ளனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

எங்கள் மத விவகாரங்களை நாங்களே பார்த்துக் கொள்வோம் – கலகொட அத்தே ஞானசார தேரர்

வைகாசி 29, 2026
இலங்கைவானிலை

 இலங்கையின் காலநிலையை பாதிக்கவுள்ள எல் நினோ – விழிப்புணர்வு கலந்துரையாடல் இன்று!

ஆனி 10, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பிரதான நீர் விநியோகக் குழாய் திருத்தப்பணிகள் நிறைவு!

ஆனி 5, 2026
இலங்கைஉலகம்

“இலங்கை என் இரண்டாவது தாய்நாடு” – சீனத் தூதுவர்!

ஆடி 25, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube