Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இந்தியாஉலகம்

இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை சந்தித்தார் தமிழக முதல்வர்!

ஆனி 8, 2026
படிக்க 2 நிமிடங்கள்

நோர்வே செஸ் தொடரில் வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்த இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தாவை தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்கள் இன்றைய தினம் சந்தித்து அவரை கௌரவித்தார்.

கடந்த 6 ஆம் திகதி ஒஸ்லோவில் நடைபெற்ற நோர்வே செஸ் தொடரில் இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா சாம்பியன் பட்டம் வென்று வரலாற்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் நோர்வை செஸ் தொடரை வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். 20 வயதான பிரக்ஞானந்தா இறுதிச் சுற்றில் வின்சென்ட் கீமரை வீழ்த்தி இந்த வரலாற்று சாதனையை படைத்துள்ளார்

நோர்வே செஸ் தொடரில் உலகின் நம்பர் வீரரான மேக்னஸ் கார்ல்சன், குகேஷ், அலிரெஸா ப்ரோஸ்ஜா, வெஸ்லி சோ மற்றும் வின்சென்ட் கெய்மர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் பங்கேற்றிருந்தனர். கடுமையான போட்டிக்கு மத்தியில் பிரக்ஞானந்தா இந்த செஸ் தொடரில் வெற்றி பெற்றிருப்பது வரலாற்றில் மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்த போட்டிகளின் போது ஆரம்பத்தில் பிரக்யானந்தா பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும் போட்டியின் நடுப்பகுதியில் தனது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அலிரெஸா ப்ரோஸ்ஜா, மெக்னஸ் கார்ல்சன் குகேஷ் ஆகியோருக்கு எதிரான கிளாசிக்கல் போட்டிகளில் அடுத்தடுத்து வெற்றியைப் பெற்று மீண்டும் போட்டிக்குள் நுழைந்தார். குறிப்பாக ஒன்பதாவது சுற்றில் குகேஷுக்கு எதிராக வெற்றி பெற்றது போட்டியின் முக்கிய திறப்பு முனையாக அமைந்திருந்தது.

இந்த தொடரின் சிறப்பம்சமாக செஸ் உலகின் நம்பர்வன் வீரரான மேக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்திருந்தார். இதன் மூலம் இந்திய செஸ் ஜாம்பவான் விஸ்வநாத் ஆனந்துக்கு பிறகு ஒரே தொடரில் மெக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை வீழ்த்திய இரண்டாவது வீரர் என்ற பெருமையை அவர் பெற்றுக் கொண்டுள்ளார். மேலும் 2026 ஆம் ஆண்டின் கிளாசிக்கல் போட்டிகளில் மெக்னஸ் கார்ல்சனை இரண்டு முறை தோற்கடித்த முதல் வீரர் என்ற அரிய சாதனையும் பிரக்ஞானந்தா நிகழ்த்தியுள்ளார்

சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தாவின் இந்த வெற்றி தனிப்பட்ட சாதனையாக மட்டுமல்லாமல் இந்திய செஸ் வரலாற்றில் மற்றுமொரு மயில்கல்லாகவும் பார்க்கப்படுகிறது உலக சாம்பியன்கள் மற்றும் முன்னணி கிராண்ட் மாஸ்டர்கள் பங்கேற்ற தொடரில், சாம்பியனாகி நோர்வேட் செஸ் வரலாற்றில் தனது பெயரை பொன் எழுத்துக்களால் பதித்துள்ளார் பிரக்யானந்தா

 

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

குழந்தைகள் பாலின மாற்றம்: மருத்துவமனை மறுப்பு

வைகாசி 19, 2026
இந்தியாஉலகம்முக்கியச் செய்திகள்

118 பெரும்பான்மைக்கு விஜய் எதிர்கட்சிகளோடு பேச்சுவார்த்தை!

வைகாசி 6, 2026
உலகம்

தாய்லாந்தின் தண்ணீர் திருவிழாவில் 191 பேர் பலி!

சித்திரை 16, 2026
இந்தியாமுக்கியச் செய்திகள்

இயக்குநர் இமயம் பாரதிராஜா உடலுக்கு முழு அரசு மரியாதை – முதலமைச்சர் விஜய்!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube