கடுகண்ணாவை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலிமத்தலாவை, கிராகமாவத்தைபகுதியில் காணாமல் போயுள்ள 20 வயதுடைய இளம் பெண் ஒருவரைக் கண்டறிவதற்காக ஸ்ரீலங்கா பொலிஸார் பொதுமக்களின் உதவியைக் கோரியுள்ளனர்.
காணாமல் போன பெண்ணின் கணவரால் கடந்த மார்ச் 11ஆம் திகதி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில், தனது மனைவி குடும்பத்தினருக்குத் தெரிவிக்காமல் வீட்டை விட்டுச் சென்றுள்ளதாகவும், இதுவரை அவர் வீடு திரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண்ணைக் கண்டறிய உதவக்கூடிய ஏதேனும் தகவல்கள் தெரிந்தால், அதனைத் தமக்கு வழங்குமாறு அதிகாரிகள் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தகவல்களை பின்வரும் கடுகண்ணாவை பொலிஸ் இலக்கங்கள் ஊடாகத் தொடர்பு கொண்டு அறிவிக்க முடியும்.
071 8591060 * 081 2571222
