Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கை

திறைசேரியின் 2.5 மில்லியன் டொலர் காணாமல்போனமை குறித்த அறிக்கை: கோப் குழு பரிசீலனை!

ஆனி 12, 2026
படிக்க 1 நிமிடங்கள்

அரச கடன்களைத் தீர்ப்பதற்காக திறைசேரியின் வசம் இருந்த 2.5 மில்லியன் அமெரிக்க டொலர் காணாமல்போனமை தொடர்பாக நிதி அமைச்சினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கை குறித்து ஆராய்வதற்காக, அரச நிதி பற்றிய குழு (COPF) இந்த வாரம் (08) நாடாளுமன்றத்தில் கூடியது.

நாடாளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தலைமையில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில் நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க மற்றும் இலங்கை கணினி அவசரப் பதில் பிரிவின் (CERT) அதிகாரிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தின் போது, நிதி அமைச்சின் கண்டுபிடிப்புகளை ஆராய்ந்த பின்னர், இது தொடர்பான தனிப்பட்ட அறிக்கை ஒன்றை சமர்ப்பிப்பதாக மத்திய வங்கி அதிகாரிகள் குழுவிடம் தெரிவித்தனர்.

இரு அறிக்கைகளும் பரிசீலிக்கப்பட்ட பின்னர், இறுதி அறிக்கை தயாரிக்கப்பட்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அரச நிதி பற்றிய குழுவின் தலைவர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

இவ்வமர்வில் பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, கௌசல்யா ஆரியரத்ன, நிஷாந்த ஜயவீர மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, நிமல் பாலிஹேன, சித்ரால் பெர்னாண்டோ, விஜேசிறி பஸ்நாயக்க மற்றும் லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரும் கலந்துகொண்டனர்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளி

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்

இலங்கைக்கு கடத்துவதற்காக எடுத்துவரப்பட்ட 120 பந்தய புறாக்கள் பாம்பனில் பறிமுதல்

ஆடி 7, 2026
இலங்கைஎங்கள் ஊர்

புதிய வணிக வளாகத்திற்கான அமைவிட மாற்றம் கோரி நெடுங்கேணி மக்கள் வலியுறுத்தல்!

ஆடி 7, 2026
இலங்கைஉலகம்முக்கியச் செய்திகள்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனியின் இறுதி சடங்கில் ரவூப் ஹக்கீம், ரிஸ்வி சாலி ஆகியோர் பங்கேற்பு!

ஆடி 5, 2026
இலங்கை

உயிர்த்த ஞாயிறு விசாரணை சூடு பிடித்தது: கைது அச்சத்துக்கு எதிராக நீதிமன்றத்தை நாடிய மூத்த DIG வருண ஜெயசுந்தர!

ஆனி 10, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube