இந்த நாட்டின் மக்களைப் பற்றிய அக்கறையுடனும் இரக்க உணர்வுடனும் நான் காணொளிகளை வெளியிட்டு வந்தேன். காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் மிரட்டினார்கள்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால ஆகியோருக்கு இந்த விடயத்தை தெரிவிக்க விரும்புகிறேன். எனக்காக குரல் கொடுக்க யாரும் இல்லை என இராஜாங்கனை சத்தாரதன தேரர் கவலை வெளியிட்டுள்ளார்.
தன் மீது அடையாளம் தெரியாத இருவர் தாக்குதல் நடத்தியுள்ளதாக தெரிவித்து அவர் அண்மையில் காணொளி ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
கடந்த சனிக்கிழமை (06) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படும் நிலையில், தாக்குதலுக்கு பின்னர் வெளியிட்ட காணொளியில் தனக்கு இனம் தெரியாத இருவர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன் போது, விகாரைக்கு முகமூடி அணிந்த நிலையில் இருவர் வருகை தந்ததாகவும் அவர்களில் ஒருவர் பருமனானவராகவும் மற்றொருவர் சற்றே மெலிந்தவராகவும் இருந்ததாகவும், அவர்கள் கதவை உடைத்து உள்ளே நுழைந்து தன்னை பலமாக தாக்கி தனது மடிக்கணினியையும் தொலைபேசியையும் எடுத்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காணொளிகளை வெளியிடுவதை நிறுத்துமாறும், அவ்வாறு செய்யாவிட்டால் தம்மை கொலை செய்வதாகவும் அவர்கள் மிரட்டினர். அடுத்த முறை வந்தால் உயிருடன் விடமாட்டோம் என எச்சரித்துச் சென்றதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
