ராகம ,பொடிவீகும்பூர பகுதியில், நேற்று (15) வலான மத்திய ஊழல் ஒழிப்புப் படையினரால் நடத்தப்பட்ட முற்றுகையின் போது, பெருந்தொகையான சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது, 450 லீட்டர் சட்டவிரோத மதுபானம் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக ராகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் 59 வயதுடை ஹெந்தல பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.
