Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
இலங்கைமுக்கியச் செய்திகள்

சிறுவர் பாதுகாப்பு நிறுவனங்களில் உத்தியோகத்தர்களுக்கான வெற்றிடங்கள்!

ஆனி 21, 2026
படிக்க 1 நிமிடங்கள்

சிறுவர்கள் தொடர்பான புகார்கள் மற்றும் வழக்குகளுக்கு நீதி வழங்குவதில் தாமதம் ஏற்படுவதற்கு, சிறுவர் பாதுகாப்புக்காகச் செயற்படும் நிறுவனங்களில் நிலவும் ஊழியர் வெற்றிடங்களே முக்கிய காரணம் என மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

குறிப்பாக, பொலிஸ் திணைக்களம் மற்றும் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை ஆகியவற்றில் அதிகமான உத்தியோகத்தர் வெற்றிடங்கள் காணப்படுவதாக அந்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

துஷ்பிரயோக சம்பவங்களைக் குறைப்பதற்காக நிறுவப்பட்ட பன்முகக் கட்டமைப்பு, இந்த வெற்றிடங்களை நிரப்புவதற்காக மேலாண்மை சேவை திணைக்களம் உள்ளிட்ட நிறுவனங்களுடன் இணைந்து உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.

தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் கீழ் நிறுவப்பட்டுள்ள பொலிஸ் பிரிவை, ஒரு சுயாதீன பிரிவாக மாற்றுவது குறித்தும் இதன்போது அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளரின் தலைமையில் அண்மையில் நடைபெற்ற விசேட குழுக் கூட்டத்திலேயே இந்தத் தீர்மானங்கள் எட்டப்பட்டுள்ளன.

இந்தச் சந்திப்பின் போது, பிறப்புச் சான்றிதழ்கள் இல்லாத சிறுவர்களைக் கண்டறிந்து, அவர்களுக்கு அதனைப் பெற்றுக்கொடுப்பதற்கான தேவையான நடவடிக்கைகளை எடுப்பது குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், சிறுவர் மேல் நீதிமன்றங்களை நிறுவுவதன் மூலம், சிறுவர்கள் தொடர்பான வழக்கு விசாரணைகளை விரைவுபடுத்தி, அவர்களுக்கான நீதியைத் தாமதமின்றி வழங்குவதன் அவசியம் குறித்தும் இங்கு விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
செவ்வாய்திங்கள்ஞாயிறுசனிவெள்ளிவியாழன்

மேலும் இது தொடர்பான செய்திகள்

புகையிலை பயன்பாட்டினால் 22 ஆயிரம் பேர் உயிரிழப்பு!

வைகாசி 27, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

பல்கலைக்கழக அனுமதி பெற்றிருந்த மாணவன் விபத்தில் மரணம்

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

சீதுவை ஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

ஆனி 13, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

பல பகுதிகளுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை

வைகாசி 22, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube