Quick Tamil News
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Quick Tamil NewsQuick Tamil News
Font ResizerAa
Search
  • முகப்பு
  • செய்திகள்
    • இலங்கை
    • இந்தியா
    • உலகம்
  • பொழுதுபோக்கு
    • சினிமா
    • ஃபாஷன்
  • வானிலை
  • விளையாட்டு
  • எங்கள் ஊர்
  • மற்றவை
    • Birthday Diary
    • RIP Book
    • தொழில்நுட்பம்
    • ஜோதிடம்
Follow US
2026 Quick Tamil News. All rights reserved.
உலகம்முக்கியச் செய்திகள்

அமெரிக்கா – ஈரான் உடன்படிக்கைக்கு ஜேர்மனி ஆதரவு

Germany Iran Nuclear Deal US-Iran Agreement Germany Support Diplomatic Relations Nuclear Negotiations International Diplomacy Middle East Politics Foreign Policy

ஆனி 17, 2026
படிக்க 1 நிமிடங்கள்

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு ஆதரவளிப்பதற்கான ஜேர்மனியின் விருப்பத்தை அந்நாட்டு ஜனாதிபதி (Chancellor) பிரீட்ரிக் மெர்ஸ் (Friedrich Merz) மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளார்.

இந்த ஆதரவானது ஹோர்முஸ் நீரிணையில் (Strait of Hormuz) மேற்கொள்ளப்படும் இராணுவ நடவடிக்கை ஒன்றில் பங்கேற்பதையும் உள்ளடக்கலாம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முக்கியத்துவம் வாய்ந்த இந்த கடல்வழிப் பாதையின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகள் முன்னின்று வழிநடத்தி வருகின்றன.

இவ்வாறானதொரு இராணுவ நடவடிக்கையில் பங்கேற்பதற்கு ஜேர்மனி ஆர்வமாக உள்ளதாக அந்நாட்டின் வெளிவிவகார அமைச்சர் வாடேபுல் (Wadephul) இதற்கு முன்னர் தெரிவித்திருந்தார்.

எவ்வாறாயினும், ஜேர்மனிய அரசாங்கம் ஏதேனும் இராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு முன்னர், அதற்கான நாடாளுமன்ற அனுமதியைப் (Parliamentary Mandate) பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

பிரான்சில் நடைபெற்று வரும் ஜி7 (G7) உச்சிமாநாட்டின் இடையே செய்தியாளர்களிடம் பேசிய மெர்ஸ், “இதற்காக பூர்த்தி செய்யப்பட வேண்டிய பல நிபந்தனைகள் இன்னும் உள்ளன, எனவே இதில் உடனடி அவசரம் எதுவும் இல்லை” என்று குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில், ஜூலை மாதத்தில் நாடாளுமன்றத்தின் கோடைகால விடுமுறை ஆரம்பமாவதற்கு முன்னர் இன்னும் இரண்டு வார கால நாடாளுமன்ற அமர்வுகள் எஞ்சியுள்ளன சுட்டிக்காட்டியதுடன், “தற்போது நேர நெருக்கடி எதுவும் இல்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

செய்தியை பகிர்ந்து கொள்ள
Facebook Whatsapp Whatsapp இணைப்பை நகலெடு அச்சிடு
இன்றைய செய்திகள்
வெள்ளிவியாழன்புதன்செவ்வாய்திங்கள்ஞாயிறு

மேலும் இது தொடர்பான செய்திகள்

இலங்கைமுக்கியச் செய்திகள்வானிலை

12 மாவட்டங்களின் பலப்பிரிவுகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

வைகாசி 14, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்

நான் ஜனாதிபதியை விரட்டினேன் என்று என்னை மக்கள் தப்பாக நினைக்க வேண்டாம் – கஸ்ஸப்ப தேரர்!

வைகாசி 3, 2026
இலங்கைமுக்கியச் செய்திகள்விளையாட்டு

ஆசிய கடற்கரை விளையாட்டு போட்டியில் இலங்கையின் நிபுணி வாசனா தங்கம் வென்று சாதனை!

சித்திரை 29, 2026
உலகம்முக்கியச் செய்திகள்

லெபனானில் இஸ்ரேல் வான்வழித் தாக்குதல்: 5 பேர் பலி!

ஆனி 8, 2026
2026 Quick Tamil News. All rights reserved.
Facebook X-twitter Youtube