கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் லெச்சுமண் விஸ்வநாதன் அவர்களின் தலைமையில் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயம், கேம்பிரிஜ் கல்லூரி, ஸ்டோனிகிளிப் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் யதன்சைட் தமிழ் மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 140க்கும் மேற்பட்ட உயர்தர மாணவர்களுக்கான இலவச கருத்தரங்கு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கொட்டகலை பிரதேச சபை தலைவர் ராஜமணி பிரசாந்த் கலந்து கொண்டார். மேலும் பிரதேச சபை உறுப்பினர்களான கணபதி கண்ணதாசன், கணேசன் இராஜேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர்.
இதனுடன் கொட்டகலை தமிழ் மகா வித்தியாலயத்தின் அதிபர், கேம்பிரிஜ் கல்லூரி அதிபர், ஆசிரியர்கள், வர்த்தக சங்க உறுப்பினர்கள் மற்றும் மாணவர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
