ஹோமாகம குற்ற விசாரணைப் பிரிவு அதிகாரிகள் குழுவொன்று அத்துருகிரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹோகந்தர, மாலசிங்ககொட வீதியில் நேற்று முன்தினம் (29) மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, பதிவு செய்யப்படாத அதிக திறன் கொண்ட 5 மோட்டார் சைக்கிள்களையும், அவற்றில் இரண்டில் பொருத்தப்பட்டிருந்த 2 போலி இலக்கத் தகடுகளையும் கைப்பற்றி, சம்பந்தப்பட்ட சந்தேகநபரை கைது செய்து அத்துருகிரிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர், 25 வயதுடைய ஹோகந்தர பகுதியைச் சேர்ந்த நபர் ஆவார்.
இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை அத்துருகிரிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
