மட்டக்குளி, பெர்குசன் வீதி பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது, 5 கிலோ 140 கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் ஒருவரை கொழும்பு மத்திய குற்றப் புலனாய்வு பிரிவினர் கைது செய்துள்ளனர்.
சந்தேகநபரிடமிருந்து போதைப்பொருள் விற்பனையின் மூலம் சம்பாதிக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 50,000 ரூபாய் பணம் மற்றும் கடத்தல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் இரண்டு கைப்பேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் 40 வயதுடைய கொழும்பு–10 பகுதியைச் சேர்ந்தவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதற்கிடையில், மொரட்டுவை பிரான்சிஸ்கு வீதி பகுதியில் நடத்தப்பட்ட மற்றொரு சுற்றிவளைப்பில், 107 கிராம் ஹெரோயின் வைத்திருந்ததாகக் கூறப்படும் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து போதைப்பொருள் விற்பனையின் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 25 இலட்சத்து 61 ஆயிரத்து 100 ரூபாய் பணமும் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
