குடாகம பகுதியில் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக, ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியின் போக்குவரத்து நடவடிக்கைகள் நேற்று (04) பிற்பகல் முதல் ஒரு வழிப்பாதையாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் மழையுடனான வானிலை காரணமாக, இவ்வீதியைப் பயன்படுத்தும் சாரதிகள் அவதானத்துடனும், குறைந்த வேகத்துடனும் வாகனங்களைச் செலுத்துமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
