நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்றும் இன்றும் கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மிக மோசமான மோதல்கள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில், போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு நீர்கொழும்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 22 வயதுடைய பிரித்தானிய பெண் கைதியான ஷார்லட் மே லீ முற்றிலும் பாதுகாப்பாக இருப்பதாகச் சிறைச்சாலை அதிகாரிகள் உத்தியோகபூர்வமாகத் தெரிவித்துள்ளனர்.
